Friday, 25 September 2009

படித்ததில்.....

அவன் பார்த்தான்
அவள் சிரித்தாள்
குழந்தை அழுது !!!

Monday, 14 September 2009

பீலிங்...

ஒவ்வொ் மனிதனுக்கும் ஒவ்வொ் feeling...

Wednesday, 9 September 2009

ஆண்ட இனம் மாண்டழிய, அருள்வாயோ?

பெம்மானே,
பேருலகின் பெருமானே,
ஆண்ட இனம் மாண்டழிய,
அருள்வாயோ?

வெய்யோனே,
என்புருகி வீழ்கின்றோம்!
வெந்தழிந்து மாய்கின்றோம்விதிதானோ?
புலம் பெயர்ந்தோம்,
பொலிவிழந்து புலன் கழிந்தோம்,
அழுதழுது உயிர்கிழிந்தோம்
அருட்கோனே!

சோறில்லை,
சொட்டுமழை நீரில்லை,
கொங்கையிலும் பாலில்லை,
கொன்றையோனே!

மூப்பானேம்,
உருவழிந்து முடமானோம்,
மூச்சுவிடும் பிணமானோம்
முக்களோனே!

ஊன்ந்தெய்ந்தோம்
ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம்
உடைக்கோனே!

நீறாகி,
ஐம்புலனும் வேறாகி,
பொன்னுடலம் சேறாகிபோகமாட்டோம்!
எம்தஞ்சை,
யாம்பிறந்த பொன்தஞ்சை,
விரல் ஐந்தும் தீண்டாமல்
வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும்,
சந்ததிகள் வீழ்ந்தாலும்,
தாய்மண்ணில் சாகாமல்
சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே!
வெம்புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி,
நீஎம்தோல் உரிப்பதுவோ!

முன்னோர் பாற்கடலில்,
அன்று முழுநஞ்சுண்டவனே!
மின்னோர் எம்மவருக்கு
பிரித்து வழங்குதியோ?

பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பு பிரகாஷ் குமார்
திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்

Fact of the day..

10 Downing Street is one of the most heavily guarded buildings in Britain. Apart from the decorative policeman, the front door cannot be opened at all from the outside because it has no handle, and no one can enter the building without passing through an airport-style scanner and a set of security gates manned by armed guards. In the first five years after Tony Blair became Prime Minister, 37 computers, 4 mobile phones, two cameras, a mini-disc player, a video recorder, four printers, two projectors and a bicycle were stolen from inside the house.

"Vast, awkward house. WILLIAM PITT THE YOUNGER"

உலகத் தமிழினமே...

உலகத் தமிழினமே!!!
உண்மைத் தமிழினமே!!!
ஒரு நமிடம் - உங்கள் உறவுகளுக்காய்
ஒரு நிமிடம்

தமிழனின் தாயகத்தில் இன்று வெடியோசைகள்
சந்தோஷத்திற்காய் வெடிக்கும் பட்டாசுகளன்று
மனிதர்களைக் கொல்லும் அசுரவெடிகள்

விலகி விலகி செல்லும் தமிழினத்தை
வீம்புக்கு இழுத்து வீதியில் இருத்தி
தங்கவும் இடமின்றி தூங்கவும் வழியின்றி
உணிர்களை காவு கொள்கின்றது அரசபடைகள்

எத்தனை பிஞ்சுகள் எத்தனை உயிர்கள்
அத்தனையும் வெறும் மண்ணுக்காய்
மண்ணோடு மண்ணாக்கப்படுகின்றது
பயங்கரவாத ஒழிப்பு போர்வையில் படுகொலை நடக்கின்றது

வன்னியெங்கும் மரண ஓலங்கள்
வீதியெங்கும் இரத்தவாடைகள்
உண்பதற்கு உணவில்லை
உறங்குவதற்கு இடமில்லை

சற்று சிந்தித்து பாருங்கள்
அந்நிய மண்ணிலிருந்தாலும் சற்று நிம்மதி நமக்கு
சொந்த மண்ணில் வாழ்ந்தாலும் எத்தனை துயரங்கள் எம்மவர்க்கு
எத்தனை குரல்கள் ஒலித்தும் செவிமடுக்காதோரை விட்டுவிட முடியுமா???
எங்கள் உறவுகளுக்காய் குரல் கொடுப்போம்
உலகத்தின் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை
மனிதம் உள்ளவர்களை எம்முடன் இணைப்போம்
மக்கள் குரல்கள் வெள்ளமாய் பெருக்கெடுக்கட்டும்
அந்த வெள்ளப் பெருக்கு அங்கே குருதி சிந்தும் உறவுகளைசற்றாவது நிம்மதி கொள்ள வைக்குமா???
போராடித்தான் பார்ப்போமே!!!

வாருங்கள் தமிழர்களே!!!
இந்தக் கோரத்திற்கு நாம் சிறு அணைகட்டுவோம்
அந்த அணையை பெரும் மலையாக்குவோம்
தமிழையும் தமிழ் உறவுகளையும் என்றுமே எம் கண்ணாகக் கொள்வோம்
எம் தமிழுறவுகளுக்காய் எம்மாளான குரல்கள் கொடுப்போம்