Showing posts with label Minority. Show all posts
Showing posts with label Minority. Show all posts

Wednesday, 9 September 2009

உலகத் தமிழினமே...

உலகத் தமிழினமே!!!
உண்மைத் தமிழினமே!!!
ஒரு நமிடம் - உங்கள் உறவுகளுக்காய்
ஒரு நிமிடம்

தமிழனின் தாயகத்தில் இன்று வெடியோசைகள்
சந்தோஷத்திற்காய் வெடிக்கும் பட்டாசுகளன்று
மனிதர்களைக் கொல்லும் அசுரவெடிகள்

விலகி விலகி செல்லும் தமிழினத்தை
வீம்புக்கு இழுத்து வீதியில் இருத்தி
தங்கவும் இடமின்றி தூங்கவும் வழியின்றி
உணிர்களை காவு கொள்கின்றது அரசபடைகள்

எத்தனை பிஞ்சுகள் எத்தனை உயிர்கள்
அத்தனையும் வெறும் மண்ணுக்காய்
மண்ணோடு மண்ணாக்கப்படுகின்றது
பயங்கரவாத ஒழிப்பு போர்வையில் படுகொலை நடக்கின்றது

வன்னியெங்கும் மரண ஓலங்கள்
வீதியெங்கும் இரத்தவாடைகள்
உண்பதற்கு உணவில்லை
உறங்குவதற்கு இடமில்லை

சற்று சிந்தித்து பாருங்கள்
அந்நிய மண்ணிலிருந்தாலும் சற்று நிம்மதி நமக்கு
சொந்த மண்ணில் வாழ்ந்தாலும் எத்தனை துயரங்கள் எம்மவர்க்கு
எத்தனை குரல்கள் ஒலித்தும் செவிமடுக்காதோரை விட்டுவிட முடியுமா???
எங்கள் உறவுகளுக்காய் குரல் கொடுப்போம்
உலகத்தின் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை
மனிதம் உள்ளவர்களை எம்முடன் இணைப்போம்
மக்கள் குரல்கள் வெள்ளமாய் பெருக்கெடுக்கட்டும்
அந்த வெள்ளப் பெருக்கு அங்கே குருதி சிந்தும் உறவுகளைசற்றாவது நிம்மதி கொள்ள வைக்குமா???
போராடித்தான் பார்ப்போமே!!!

வாருங்கள் தமிழர்களே!!!
இந்தக் கோரத்திற்கு நாம் சிறு அணைகட்டுவோம்
அந்த அணையை பெரும் மலையாக்குவோம்
தமிழையும் தமிழ் உறவுகளையும் என்றுமே எம் கண்ணாகக் கொள்வோம்
எம் தமிழுறவுகளுக்காய் எம்மாளான குரல்கள் கொடுப்போம்